பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
Intimacy Tips :
பலருக்கு, அவர்களின் படுக்கையறை வாழ்க்கை குதூகலமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக எடுக்கும் முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது நெடு நாட்களுக்கு நிலைக்காமல் போவதும் உண்டு.
Intimacy Tips :
இதை எளிமையாக்கும் உடற்பயிற்சிகள் குறித்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? இங்கு அது குறித்து பார்க்கலாம்.
Child's Pose :
இந்த உடற்பயிற்சியை தினசரி நாட்களில் கூட செய்யலாம். ஹெவியாக உடலுக்கு உழைப்பு கொடுத்து உடற்பயிற்சி செய்த பின்னர், பின்பகுதி மற்றும் தோள்பட்டையை ரிலாக்ஸ் செய்ய இதை சில செய்வதுண்டு. இது, ஒருவரின் படுக்கையறை வாழ்க்கையை மேன்மை படுத்த உதவும் என 2019ல் வெளியான மருத்துவ ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Happy Baby Pose:
இந்த உடற்பயிற்சி, ஈசியாக செய்யக்கூடியவைகளுள் ஒன்று. இதை செய்ய முதலில் தரையில் படுக்க வேண்டும். உங்கள் முட்டியை மார்புக்கு அருகே கொண்டு வந்து உங்கள் குதிகாலை தொட முயற்சி செய்ய வேண்டும். உங்கள் காள்கலை நன்றாக அகற்ற வேண்டும். உங்கள் கைகளால் கால்களை மெதுவாக தூக்க வேண்டும். இந்த நிலையில் 30 முதல் 60 விநாடிகள் வரை இருக்க வேண்டும்.
Kegels:
இந்த உடற்பயிற்சி, உடலுறவு வாழ்க்கை மட்டுமன்றி உங்கள் இடுப்பையும் வலுவாக்க உதவும். இந்த உடற்பயிற்சி செய்கையில், உடலுறவுக்கு உதவும் பாகங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், இந்த உடற்பயிற்சியை செய்யலாம் என சில மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Seated Butterfly :
இந்த உடற்பயிற்சி, உடல் ரீதியாக மட்டுமன்றி உணர்வு ரீதியாகவும் உங்களை உடலுறவுக்கு தயார் படுத்துமாம். இதை செய்ய முதலில் தரையில் அமர வேண்டும். பின்பு, உங்கள் பாதங்கள் இரண்டையும் நேராக ஒன்று சேர்த்து அவற்றை கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டும். இது போல, 30 விநாடிகள் பிடித்துக்கொள்ள வேண்டும்.
Seated Pelvic Tilts :
இந்த உடற்பயிற்சியை ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டே செய்யலாம். நாற்காலியின் நுணியில் முதலில் அமர வேண்டும். உங்கள் இரு கால்களையும் நன்றாக அகற்றி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் இடுப்பை முன்னோக்கி சாய்த்து, முதுகை சற்று வளைக்கவும். இப்படி 5 விநாடிகள் பிடித்துக்கொண்டு உங்கள் இடுப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படியே 10 முறை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)