உங்கள் ஏசி வெடிக்காமல், தீ பிடிக்காமல் இருக்க.... நீங்கள் செய்ய வேண்டியவை..!!
கடும் கோடை: வட இந்தியா முழுவதும் கோடை வெப்பநிலை உயர்ந்து, பல பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸைத் தொடுவதால், ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தில்லி அருகில் உள்ள நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் உள்ள ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
ஏசி பயன்பாடு: ஏசி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏசி வெடிக்காமல் பாதுகாப்பாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்களும், உங்களது குடும்பவும் பாதுகாப்பாக இருக்கலாம்.
ஏசி ஏர் பில்டர்கள்: ஏசி பில்டர்களை சுத்தல் செய்யவில்லை என்றால், ஏஎசியின் குளிரூட்டம் திறன் குறைந்து அதிகம் உழைக்கக் வேண்டி வருவதால், அதிக வெப்பமடைகிறது. எனவே, 15 நாட்களுக்கு ஒரு முறை பில்டர்களை சுத்தம் செய்யவும்.
வெளிப்புற யூனிட்: ஏசியின் வெளிப்புற யூனிட்களில், தூசு குப்பைகள் அதிகம் இருந்தால், மின்தேக்கி சுருள்களைத் தடுத்து, செயல்திறனைக் குறைத்து, அதிக வெப்பமடையும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே வெளிப்புற யூனிட்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதற்கு கம்பெனி பரிந்துரைத்துள்ளபடி சர்வீஸ் செய்ய வேண்டும்.
ஏசிக்கான இடம்: ஏசியின் வெளிப்புற யூனிட்டை சுற்றியுள்ள பகுதியில் நன்றாக காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து பக்கங்களிலும் யூனிட்டை சுற்றி குறைந்தபட்சம் இரண்டு அடி இடைவெளியை பராமரிப்பது நல்லது. யூனிட்டுக்கு அருகில் பெட்ரோல் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய பொருட்களை சேமிக்க வேண்டாம்.
எக்ஸ்டென்ஷன் கார்டு: ஏசி அலகுகளுக்கு என பிரத்யேக வயரிங் தேவை. எக்ஸ்டென்ஷன் கார்டு உபயோகிப்பது சர்க்யூட்டை ஓவர்லோட் செய்து அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இதனால் தீ பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஏசி சர்வீஸ்: கம்பெனி மூலம் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஏசி வயரிங் செக் செய்து, தளர்வான இணைப்புகளை சரிபார்க்கவும். சாத்தியமான சிக்கல்களை அவை எழுவதற்கு முன்பு அடையாளம் காண்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.
ஏசியிலிருந்து வரும் ஒலி: ஏசி யூனிட்டில் இருந்து அசாதாரண சத்தங்கள் அல்லது நாற்றங்கள் வரவிருக்கும் ஆபத்தின் அறிகுறி. உங்கள் ஏசி யூனிட்டில் இருந்து அரைக்கும் சத்தம், அதிக அதிர்வுகள் அல்லது எரியும் வாசனையை வெளிவந்தால், உடனடியாக அதை அணைத்துவிட்டு தொழில்நுட்ப வல்லுநரைத் தொடர்புகொள்ளவும்.