இயற்கையாகவே நீரிழிவு நோயைக் குறைக்க எளிய வழிகள்!
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் தவறாமல் உடல் பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது, அதனால் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடலை ஹைட்ரேட்டாக வைக்கும்பொழுது உடலிலுள்ளா செல்கள் சிறப்பாக செய்லபடும், அதனால் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம்.
சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும், அதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 7-8 மணி நேர உறக்கம் அவசியமானது.
குரோமியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது இன்சுலின் சரியாக செயலாற்ற உதவுகிறது, நீரிழிவு நோயை தடுக்க குரோமியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்.
மன அழுத்தத்தால் உடலின் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது, முடிந்தவரை மகிழ்ச்சியாக நம்மை வைத்துக்கொள்வது நல்லது. மன அழுத்தம் பல்வேறு உடல் சிக்கல்களை ஏற்படுத்தும்.