ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஜூஸ்கள்! தினமும் ஜூஸ் குடித்தால் ரத்தசோகைக்கு ஜூட்
இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கும் ரத்த சிவப்பணுக்கள் ஹீமோகுளோபின் என்று அழைக்கப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது
இரும்புச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய சப்ளிமெண்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருந்தாலும், நமது வீட்டிலேயே கிடைக்கும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் தயாரிக்க பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.
ஹீமோகுளோபின் அளவானது அண்களுக்கு 14-18கி/டெ. லி மற்றும் பெண்களுக்கு 12-16 கி/டெ. லி இருக்க வேண்டும். இந்த அளவை விட குறைவாக இருந்தால் அது ரத்தசோகை என்று அறியப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பல வகைகளில் பாதிக்கப்படும். அதேபோல ஹிமொகுளோபின் அளவு அதிகமாக இருப்பதும் ஆபத்தானது
இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமான பீட்ரூட் இரத்த சோகைக்கு நல்லது. இதிலுள்ள சத்துக்கள் இரத்த சிவப்பணுக்களை சரிசெய்து மீண்டும் செயல்படுத்த உதவுகிறது, இது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேலும் அதிகரிக்கிறது. இரத்த சோகைக்கு பீட்ரூட்டை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் அதனை சாறாக எடுத்து அருந்துவதாகும். அதுமட்டுமல்ல, பீட்ரூட் சாறு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான ஜூஸ் ஆகும்
மாதுளை சுவையானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. இந்த பழத்தில் இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலை ஆதரிக்கும் அற்புதமான கலவையாகும். மாதுளையின் துடிப்பான சிவப்பு நிறம் அதன் வலுவான ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை பிரதிபலிக்கிறது. மாதுளையை பழச்சாறாக அருந்தினால் அது ருசியானதாகவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கும்
இந்தியாவில் மிகவும் பிரபலமான கரும்புச்சாறு சுவையானது, இயற்கையானது என்பதுடன், இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது. அதன் இயற்கையான இனிப்பானது, இரும்புச் சத்து உட்கொள்ளலை அதிகரிக்கச் செய்து, புத்துணர்ச்சியூட்டும் சத்தான தேர்வாக அமைகிறது.
நெல்லிக்காய் வைட்டமின் சியின் அற்புதமான சக்திகளைக் கொண்டுள்ளது. தினசரி நெல்லிக்காய் சாறு அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரும்பு உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது, இதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகமாகும். துவர்ப்புச்சுவையுள்ள இந்த பானம், அனைத்துவிதத்திலும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது.
திராட்சைப் பழத்தில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன, அவை இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் இரத்த சோகை அபாயத்தைக் குறைப்பதற்கும் அருமையான மருந்தாக செயல்படுகிறது. கூடுதலாக, திராட்சைகளில் தாமிரம் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்தை ஆதரிக்கிறது. எனவே, திராட்சையையும் அதன் பழச்சாறையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவும்.
பொறுப்புத்துறப்பு: பழரசங்களும் பழங்களும் உடல் நலனை மேம்படுத்துபவை என்றாலும், வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பழரசங்களை பருகுவது நல்லது. தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.