அழகால் மனதை மயக்க வேண்டுமா? சருமத்தை புதுப் பொலிவுடன் பிரகாசிக்க வைக்க ஸ்டாராபெர்ரி!

Fri, 26 Jan 2024-8:42 am,

வைட்டமின் சி, ஃபோலேட்  எனப்படும் வைட்டமின் பி9 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் ஆற்றல் மையமாக விளங்குகிறது ஸ்ட்ராபெர்ரி. தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின்,  பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ள இந்த பழம் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துகிறது

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும்  புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் மரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால், சருமத்தின் இயற்கையான தன்மை பாதுகாக்கப்படுகிறது

ஸ்ட்ராபெரி ஃபேஸ் மாஸ்க் தேன், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸின் அருமையான பண்புகளை ஒன்றிணைத்து, ஃபேஸ் மாஸ்க் உருவாக்கி அதை முகத்தில் தடவி சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் சருமம் பளபளக்கும். தேன் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது, ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்குகிறது. ஸ்டாபெர்ரியின் சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன

வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரியுடன் தேன் கலந்து தயாரிக்கும் பேஸ் மாஸ்க், சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்ககும். வாழைப்பழங்கள் ஹைட்ரேட் செய்தால், ஸ்ட்ராபெர்ரி தனது அற்புதமான பண்புகளின் சருமத்தின் நிறத்தையும் தரத்தையும் மேம்படுத்துகிறது

ஸ்ட்ராபெரி ஐஸ் க்யூப்ஸ் மூலம் குளிர்ந்த வெப்பநிலையில் முகத்தை பொலிவாக்கலாம். இது வீக்கத்தைக் குறைக்கவும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் உதவும். சருமத்தின் துளைகளை இறுக்கமாக்கி, பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவது முக அழகுக்காக என்றால், ஸ்டாராபெர்ரி பழத்தை, அப்படியே உண்பது, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உள்ளுக்கும், வெளித் தோற்றத்திற்கும் அற்புதமான பலன்களை அளிக்கும் ஸ்டார்பெர்ரியை பல விதங்களில் பயன்படுத்தி அழகை மெருகூட்டி, பேரழகாக மாறலாம்

கடைகளில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி பேக் போன்ற செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது அதிக பலன்களைக் கொடுக்கும் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link