புகைப்படம், வீடியோ பகிர்வதற்கு முன்பு இந்த ரூல்ஸ் எல்லாம் தெரிஞ்சுகோங்க!

Sat, 25 May 2024-12:25 pm,

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 -  இந்த சட்டம் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னணு கையொப்பங்கள், நகல் உரிமைகள் போன்ற மின்னணு தரவு போன்ற விஷயங்களைக் கையாள்கிறது. பயனர்களின் அனுமதியின்றி இதுபோன்ற ஆவணங்களை நீங்கள் பகிர்ந்து கொண்டால், நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 - சமூக ஊடகங்கள், இணைய வழி ஒளிபரப்புகள் ஆகியவற்றுடன் இணையவழியிலான செய்தி உள்ளடக்கங்களையும் கட்டுப்படுத்துவதாக இந்த விதிகள் அமைந்துள்ளன. சமூக ஊடகங்கள் தேவையெனில், தங்களது பயனர்களைப் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இந்திய தண்டனைச் சட்டம், 1860 - அரசுக்கு எதிரான குற்றங்கள், ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள், பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்கள், அரசாங்க ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள், அரசாங்க ஊழியர்களின் சட்டப்பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள், பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள், பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரிகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள், மதம் தொடர்பான குற்றங்கள், மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் (கொலை) வகைப்படுத்தப்பட்டு தண்டனை கிடைக்கும்.

வெறுப்பு பேச்சு சட்டம், 1956 - இந்தச் சட்டத்தின் கீழ், இணையத்தில் தவறான அல்லது அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் யாரேனும் தண்டிக்கப்படலாம். 

 

பெண்கள் குற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்பு சட்டம், 2013 - இந்த விதியின் கீழ், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றமாகும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது என்பது ஒரு நபரின் தனியுரிமையை மீறுகிறது. எந்தவொரு நபரையும் அவதூறாகப் பேசுவது அல்லது அவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துதல், தவறான மொழி அல்லது வெளிப்படையான பாலியல் சார்ந்த புகைப்படம், வீடியோக்களை பதிவிடுவது. குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்தை சித்தரித்தல், வன்முறை அல்லது வெறுப்புப் பேச்சைத் தூண்டுதல் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற வாய்ப்பு இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள், வீடியோ அல்லது புகைப்படம் சட்டத்தை மீறுவதாக நீங்கள் உணர்ந்தால், சைபர் கிரைம் புகார் போர்ட்டலில் புகார் செய்யலாம்: https://cybercrime.gov.in/. நீங்கள் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம்: http://ncw.nic.in/ மற்றும் உங்கள் உள்ளூர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link