தீபாவளிக்கு பிறகு சூரிய கிரகணம்: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை

Fri, 21 Oct 2022-1:23 pm,

சாஸ்திரங்களின்படி, சூதக காலத்தில் சிலை வழிபாடு செய்யக்கூடாது. இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உணவுப் பொருட்களில் தர்பை, துளசி இலைகள் போன்றவை வைக்கப்படுகின்றன. இது தவிர, கோயில்களிலும் கிரகணம் முடிந்து சுத்தம் செய்த பிறகே வழிபாடுகள் தொடங்கும். வீடுகளிலும் கிரகண காலத்திற்கு பிறகு, அனைவரும் குளித்து, வீடுகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை கிரகணத்தின் தொடுதல் நிலை இந்தியாவில் மட்டுமே இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

ராசிகளை பாதிக்காத கிரகணம் என்பது இருக்க முடியாது. இந்த கிரகணத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். சில ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணம் மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டுவருகிறது. சிலருக்கு இந்த கிரகணம் மிகவும் மோசமாக இருக்கும். தீமைகள் மற்றும் நன்மைகள் ஒருபுறம் இருக்க, பொதுவாக கிரகண காலத்தில் இறைவனின் பெயரை ஜபம் செய்வது நல்லது.

 

மகர ராசிக்காரர்கள் சூரிய கிரகண காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும்.  வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்கார்ரகள் கவனமாக இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்போது முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 

சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.  பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், இப்போது கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது அதிக கவனம் தேவை. விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையாய் இருப்பது நல்லது. பணி இடத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழவுள்ள சூரிய கிரகணம் மிதுன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொண்டு வரும். திருமண உறவுகளில் மன கசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணி இடத்திலும் வியாபாரத்திலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link