அந்த நாள் ஞாபகம்….. உலகத் தலைவர்கள் அன்றும் இன்றும்!!
உழைப்பும், நேர்மையும், மனதில் உறுதியும் இருந்தால், எந்த நிலையில் இருந்தாலும், எந்த நிலையையும் அடையலாம் என்பதற்கு நரேந்திர மோடி ஒரு எடுத்துக்காட்டு. எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர் இள வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவராக, சமூக சேவையை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார். மகத்தான மக்கள் ஆதரவோடு முதலில் 2014 ஆம் ஆண்டும், பின்னர் 2019 ஆம் ஆண்டும் தேர்லில் வென்று, பிரதமராக மக்களுக்கு தொண்டாற்றி வருகிறார்.
பாகிஸ்தானின் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் இம்ரான் கான் முகியமானவர். உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் இவர். 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பிரதமரானார்.
பொருளாதார படிப்பில் பட்டம் பெற்ற டிரம்ப் தன் தந்தையின் நிறுவனத்திலேயே சேர்ந்து அவருடன் வர்த்தகத்தைக் கவனித்துக்கொண்டார். உலகின் மிகச்சிறந்த வர்த்தகர்களில் டிரம்பும் ஒருவர். 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஆனார்.
லெனிங்கிராட் எனும் இடத்தில் பிறந்த ப்யுடின், சிறு வயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். 1999 ஆம் ஆண்டு போரிஸ் எல்ஸ்டின் அதிபர் பதவியிலிருந்து விலகி ப்யுடினை அதிபராக்கினார்.
ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிக்கையாளராக இருந்த ஜான்சன் பல பத்திரிக்கைகளில் பணி புரிந்துள்ளார். இள வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த இவர் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமரானார்.