சௌரவ் கங்குலியின் செல்ல மகள் சனா... என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?

Fri, 12 Jan 2024-2:07 pm,

சௌரவ் கங்குலி - புகழ்பெற்ற நடன கலைஞர் டோனா கங்குலி ஜோடியின் ஒரே மகள் சனா கங்குலி. இவருக்கு வயது 22. 

 

இவர் கொல்கத்தாவில் உள்ள லோரேடோ ஹவுஸ் பள்ளியில் படித்தவர். 12ஆம் வகுப்பு தேர்வில் 98 சதவீதத்தில் தேர்ச்சிப் பெற்று, உயர்படிப்புக்காக லண்டன் சென்றார். 

லண்டனில் உள்ள குளோபல் பல்கலைக்கழகத்தில் சனா இளநிலை பொருளாதார பட்டப்படிப்பை முடித்தார். அவரின் பட்டமளிப்பு விழாவிற்கு அவரது பெற்றோர்கள் சென்றிருந்த புகைப்படங்கள் வெளியாகின. 

 

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே, அவர் லண்டனில் உள்ள Deloitte மற்றும் PwC என்ற நிறுவனங்களிலும் பயிற்சி மேற்கொண்டார். 

பட்டம் பெற்ற உடனேயே அவருக்கு INNOVERV என்ற நிறுவனத்தில் முழு நேர ஆலோசகர் பணி கிடைத்தது. இருப்பினும், அவரின் வருமானம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. 

தயார் டோனாவை போலவே சனாவும் நடனம் ஆடக்கூடியவர். இவர்கள் இருவரும் சேர்ந்து இந்தியாவில் பல மேடைகளில் நடனமாடி உள்ளனர். 

சனா கங்குலி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 77 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link