வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்

Wed, 20 Sep 2023-8:16 am,

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்களைச் சாப்பிடுவது நோய்களின் ஆபத்தைக் குரைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

இலவங்கப்பட்டை வைரஸ் தொற்றுகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாக்கும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். பாலிபினால்கள் மற்றும் புரோந்தோசயனிடின் ஆகியவற்றைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றம் கொண்டிருபதால் தான், பட்டை எனப்படும் இலவங்கப்பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஓமம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், ஓமத்தை வறுத்து, அதை துணியில் கட்டி நுகர்ந்தால், நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும். என்பது பலருக்குத் தெரியாது

ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிகமாகக் கொண்ட குருமிளகு வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகளையும் கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. சளி, இருமல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

உடலுக்கு வலிமை தரும் மசாலாக்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தாகிவிடும்

சோம்பு, ஓமம், சீரகம் என பல மசாலாக்கள் உடலுக்கு வலிமையைக் கொடுத்து நோய்களை போக்கும் என்றாலுல், அவற்றை எதனுடன் எதை எந்த விகிதத்தில் சேர்க்கிறோம் என்பதும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கும்

வைரஸ் தொற்றுகள் உட்பட பலவிதமான நிலைமைகளுக்கு பூண்டு ஒரு பிரபலமான இயற்கை தீர்வாகும்.

பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்

இஞ்சி ஒன்றல்ல பல நோய்களுக்கு எதிரி, அதனால்தான் இதை அடிக்கடி டீயில் கலந்து குடித்து வருகிறோம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் கலவை உடலுக்கு வலிமையை அளித்து பல சிறிய மற்றும் பெரிய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை தகவல்களை வழங்க மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link