ராயல் என்பீல்டு இந்தியாவில் இறக்கிய ஸ்டைலிஷ் பைக்... விலை எவ்வளவு தெரியுமா?

Tue, 16 Jan 2024-1:54 pm,

ஆட்டோமொபைல் நிறுவனமான ராயல் என்பீல்டு தனது மிகவும் பிரபலமான பைக் ஷாட்கன் 650 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்டைலான பைக்கில் சக்திவாய்ந்த எஞ்சின் உள்ளது. 

 

இந்த பைக் சிங்கிள் மற்றும் டபுள் சீட் ஆப்ஷனுடன் வருகிறது. இது எல்இடி ஹெட்லேம்ப், USD முன் ஃபோர்க் மற்றும் சக்திவாய்ந்த பிரேக்கிங் அமைப்புடன் பிளாட் ஹேண்டில்பார் கொண்டுள்ளது. இது ஜாவா போன்ற பிராண்டுகளின் பைக்குகளுடன் போட்டியிடும்.

 

ராயல் என்பீல்ட் 650 மாடலின் நீளம் 2170 மி.மீ., அகலம் 820 மி.மீ., மற்றும் உயரம் 1105 மி.மீ., ஆகும். இதன் வீல்பேஸ் 1465 மி.மீ., மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 மிமீ ஆகும். இந்த பைக்கில் 13.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. இது தவிர, பைக்கில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 18 இன்ச் முன் சக்கரம் மற்றும் பின்புறத்தில் 19 இன்ச் டயர் உள்ளது.

 

இந்த பைக்கில் ட்வின் ஷாக் ரியர் அப்சார்பர் இருக்கிறது. இது மென்மையான சவாரி அனுபவத்தை அளிக்கிறது. இந்த பைக்கில் டிஜிட்டல்-அனலாக் கிளஸ்டர் உள்ளது. இதில் 4 வண்ண விருப்பங்களில் வருகிறது.

 

இந்த பைக் 648cc பேரலல் ட்வின் 4 ஸ்டோக் SOHC ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 46.3 php பவரையும், 52.3 Nm டார்க் திறனையும் உருவாக்கும். இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 

ராயல் என்பீல்டு 650 ஷீட் மெட்டல் கிரே விலை 3 லட்சத்து 59 ஆயிரத்து 430 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதன் கிரீன் டிரில் பிளாஸ்மா ப்ளூ  மாடல் 3 லட்சத்து 70 ஆயரத்து 138 ரூபாய்க்கும், டாப் மாடல் 3 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் விற்பனைக்கு கிடைக்கிறது. 

 

இந்த பைக் இந்தியாவுக்கு முன்பே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Super Meteor 650, Continental GT 650 மற்றும் Interceptor 650 ஆகியவற்றை ராயல் என்பீல்டு உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link