குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை... 2025 தொடக்கத்திலேயே வெற்றி மழை, ராஜயோகம்
குரு பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். மக்களின் திருமண வாழ்க்கை, குழந்தை செல்வம், பணம், பொருள், சந்தோஷம், கல்வி ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் இருக்கிறார்.
குரு பகவான் அக்டோபர் 9, 2024 அன்று ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அவர் பிப்ரவரி 5, 2025 வரை வக்கிர நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார். குருவின் வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு அபரிமிதமான மகிழ்ச்சி உண்டாகும், வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ரட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பதவி, கௌரவம் உயரும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில், சொத்து வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல செய்திகள் பல வரும். குடும்பத்தில் சுப நிகழச்சிகள் நடக்கும்.
மிதுனம்: மிதுனத்தில் குரு வக்ர பெயர்ச்சியால் பல வித சாதகமான நன்மைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப பிரச்சனைகளும் குறையும். சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளும் இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரப் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். பணியிடத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: குரு வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும், மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் எளிதாக முடிக்கப்படும். வணிகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றியை அடைவீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி சுபமான பலன்களை அளிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.
கும்பம்: குரு வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. விருந்தினர்கள் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுக்கு அதிகமாகும் பண வரவால் பிறருக்கு அதிகமாக உதவி செய்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.