ஒரே மாதத்தில் இரு முறை பெயர்ச்சியடையும் சுக்கிரனால் ஜாக்பாட் லாபம் பெறும் 5 ராசிகள்!

Tue, 02 Jul 2024-7:20 am,

ஒரே மாதத்தில் இரு முறை சுக்கிரன் பெயர்ச்சியடைவதால் சிலருக்கு அருமையான அதிர்ஷ்டம் உண்டாகும் என்றால், சிலருக்கு சற்று கவலையைத் தரும் காலம் உருவாகலாம்

12 ராசிகளில் மேஷம், கடகம், விருச்சிகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு கடகம் மற்றும் சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்

வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் என்றால் மறுபுறம் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். திடீரென எதிர்பாராத பணம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

மிகவும் மங்களகரமான இந்த சுக்கிரனின் பெயர்ச்சிகளால், துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரத்து கிடைக்கும், எதிர்பாராத வெற்றியும் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். சில முக்கிய வேலைகள் நடக்கும்.

 

வெற்றிக்கான புதிய கதவுகளைத் திறக்கும் சுக்கிரன் பெயர்ச்சிகளாக இந்தப் பெயர்ச்சிகள் இருக்கும். செல்வம் மட்டுமல்ல, மனநிம்மதியும் மிகப் பெரிய சொத்து தான் என்பதை உணரும் அளவுக்கு சுக்கிரனின் இரு பெயர்ச்சிகளும் நல்ல காலத்தைக் கொண்டு வரும். உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.  

ஜூலை மாதத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கும் அருமையான பலன்களைத் தரும். பணப் பிரச்சனைகள் நீங்கும். பழைய முதலீடுகள் தற்போது லாபம் தரத் தொடங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் என்றால், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்கும்

புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்திலும் அதிக லாபம் கிடைக்கும், தொழில்ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நேரம் இது

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link