நவகிரகங்களின் பிரதானமான சூரியனுக்கு பித்ரு பக்ஷத்தில் முதல் மரியாதை கொடுக்கப்படுவது ஏன்?

Sun, 22 Sep 2024-11:30 am,

சூரியன் கன்னி ராசிக்குள் இருக்கும் ஒரு மாதமும், நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து வெளியேறி, தனது சந்ததியினரின் வீடுகளுக்கு வருவதாக ஐதீகம்.  

சூரியன் கன்னிக்கு அடுத்த ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் வரையிலான ஒரு மாதம் தான் பித்ருக்கள் தங்கள் லோகத்தில் இருந்து வெளியில் வசிக்கும் ஒரு மாத காலமாகும்  

இந்து மத சாஸ்திரங்களின்படி சூரியனை ஆத்மகாரகன், பித்ரு காரகன் என்று அழைக்கிறோம். ஒருவருடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம். 

சூரியன் பலம் பெற்றிருக்கும் ராசிகள் தான் பிரபலமானவர்களாகவும், அரசியல் போன்ற துறைகளில் முன்னிலையில் இருப்பவர்களாகவும் இருப்பார்கள்

சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியானவர்களாகவும், அதிகாரம் மிக்க பொறுப்புகளிலும் இருப்பார்கள். பிறர், இவர்களின் வார்த்தைகளை மதித்து நடக்கும் உயரத்தில் இருப்பார்கள்.

சூரியனுக்கு படைப்பது என்றால் சர்க்கரைப் பொங்கல் தான் விசேஷமானது. 

ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்ல, பித்ருலோகத்திற்கு சென்ற பிறகும் கூட சூரியனின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது

முன்னோர்களுக்கு பித்ரு பக்ஷத்தில் தர்ப்பணம் செய்யும்போது, பித்ரு காரகரான சூரியனின் முன்னிலையில் அதிலும் குறிப்பாக நீர்நிலைகளில் செய்வது வழக்கம், அதுவே மிகவும் சிறப்பானதும் கூட...

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link