மூளை கம்ப்யூட்டரை போல் வேலை செய்ய... உதவும் சில சூப்பர் உணவுகள்
Foods For Sharp Brain: மனித வாழ்வில் மூளை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மிக அதிகம். நம் உடல் செயல்பட ஆற்றல் தேவைப்படுவது போல், மூளையும் நன்றாக செயல்பட சரியான ஊட்டச்சத்து தேவை. எனவே, உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியம். மூளைக்கு ஆற்றலை கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாதுமை பருப்பு: மூளையை போன்ற வடிவம் கொண்ட வாதுமை பருப்பில் மூளைக்கு நன்மை செய்யும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற போன்ற சத்துக்கள் உள்ளன. வாதுமை பருப்பை தொடர்ந்து உட்கொள்வது, மூளையின் செயல்திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
பாதாம் மற்றும் வேர்க்கடலை ஆகிய இரண்டிலும் மூளைக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் அவை நல்ல கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஏராளமாக உள்ளன. வேர்கடலை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கபடுவது குறிப்பிடத்தக்கது.
ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் அதிக அளவு கோலின் உள்ளது. இது நினைவாற்றலை பலப்படுத்துகிறது மற்றும் மூளையை தூண்டி, சிந்திக்கும் திறனைக் கூர்மைப்படுத்துகிறது.
மீன் உணவுகள் குறிப்பாக, சால்மன் மீன் போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகள் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை பெருக்கி மன ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
பீன்ஸ்: நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பீன்ஸ், கவனம் செலுத்தும் திறனை அதிகப்படுத்தி மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
பச்சை காய்கறிகள்: வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் நிறைந்த பச்சை காய்கறிகள் மூளையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும், இவை மூளை சுறுசுறுப்பாக்கி கணிணி போல் வேலை செய்ய உதவும்.
அவுரிநெல்லிகள்: அவுரிநெல்லிகள் மூளையில் ஏற்படும் சிதைவு, மன அழுத்தங்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை நீக்கி, நரம்பு செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.