12 நாட்களில் சூரியப் பெயர்ச்சியால் பணமழையில் நனைந்து மகிழவிருக்கும் ராசிகள்
சூரியன் தற்போது கடக ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 17 வரை கடகத்தில் இருக்கும் சூரிய்ன், சிம்ம ராசிக்குக் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பெரியவர்களை உபசரிப்பது பல வழிகளில் பலன் தரும். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய வேலை வாய்ப்பு அமையும். நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும்.
ஆகஸ்ட் மாதத்தில் சூரியனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆவணியில் சூரிய பரிவர்த்தனை சாதகமானதாக இருக்கும். வியாபார விஷயங்களில் பெரிய வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.