காதல் தோல்விக்கு பிறகு மரண கம்-பேக் கொடுத்த கோலிவுட் பிரபலங்கள்!!
நடிகை த்ரிஷாவிற்கு 2015ஆம் ஆண்டு, தொழிலதிபர் வருண் மனியனுடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திருமணம் நின்று போனது. அதற்கு முன்னர் இவரும் நடிகர் ராணாவும் காதலித்ததாக கூறப்பட்டது. இந்த இரு காதல் தோல்விக்கு பிறகும், த்ரிஷா தனது நடிப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.
சிலம்பரசன், நயன்தாராவை மிகத்தீவிரமாக காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அவர் ஹன்சிகாவையும் சில வருடங்கள் டேட்டிங் செய்தார். இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. பல கடினமான தருணங்களை வாழ்க்கையில் சந்தித்த சிம்பு, இப்போது கம்-பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமந்தா-நாகசைதன்யாவின் காதல் திருமணம் 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. இதையடுத்து மனம் உடைந்து போய் இருந்த சமந்தா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் கால் ஊன்ற ஆரம்பித்திருக்கிறார்.
நடிகை நயன்தாரா சிம்புவுடனான பிரேக்-அப்பிற்கு பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதலும் முறிவில் முடிந்தது. இதையடுத்து தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், மகிழ்ச்சியாக தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.
காதல் தோல்வி, படங்கள் தோல்வி என பல கடினமான தருணங்களை கடந்து வந்தவர் கமல்ஹாசன். வாணி கனபதி, சரிகாவுடனான காதல் திருமணங்கள் அடுத்தடுத்து விவாகரத்தில் முடிய, பின்னர் பல ஆண்டுகள் கௌதமியுடன் வாழ்ந்து வந்தார். இந்த உறவும் 2016ஆம் ஆண்டு முடிந்து விட்டது. இருப்பினும் தொடர்ந்து நடித்து, மக்கள் மத்தியில் உலக நாயகனாக விளங்குகிறார் கமல்ஹாசன்.
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றாலும் இருவரும் தனித்தனியாகவே வசித்து வருகின்றனர். தனுஷ், தன் விவாகரத்திற்கு பிறகு வாத்தி, ராயன் என அடுத்தடுத்த ஹிட் கொடுத்தார். இப்போது இயக்குநரகாவும் ஜொலித்து வருகிறார்.
இசையுலகை சேர்ந்த அனிருத் ஆண்ட்ரியா, தங்களது புகைப்படம் லீக் ஆன சில மாதங்களிலேயே உறவை முறித்துக்கொண்டனர். இந்த காதல் தோல்வியால் அனிருத் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது ராக் ஸ்டாராக திகழ்ந்து வரும் இவர், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். ஆண்ட்ரியாவும் தான் பாடும் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அமலா பால், இயக்குநர் ஏல்.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, சிங்கிளாக இருந்து வந்த இவர், சமீபத்தில் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.