இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

Fri, 10 Nov 2023-2:03 pm,

இந்த வருடம் பல இந்திய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுள், தங்களின் தலை தீபாவளியை கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாமா? 

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியனின் திருமணம் அவர்களின் சொந்த ஊரில் மிக எளிமையான முறையில் நடைப்பெற்றது. இவர்கள், இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர். 

சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர், கவின். இவர், மோனிகா டேவிட் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

கவின்-மோனிகாவிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைப்பெற்றது. இவர்கள், இந்த வருடம் கணவன் மனைவியாக தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர். 

தென்னிந்திய நடிகை அமலா பால், தனது காதலர் ஜகத் தேசாயை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். 

ஜகத்-அமலா பாலின் திருமணம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைப்பெற்றது. இவர்களுக்கும் இது தலை தீபாவளிதான். 

இந்த ஆண்டு, பாலிவுட் திரையுலகில் நடைப்பெற்ற திருமணங்களிலேயே பெரிதாக பேசப்பட்டது, சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானியின் திருமணம்தான். இவர்கள் கணவன்-மனைவியாக கொண்டாடும் முதல் தீபாவளி இது. 

ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் ராகவ் சத்தாவை இந்தி நடிகை பரினீதி சோப்ரா சமீபத்தில் கரம் பிடித்தார். இந்த தீபாவளியை இவர்கள் கணவன் மனைவியாக கொண்டாட உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link