இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா! வைரலாகும் புகைப்படங்கள்..
ரசிகர்களால், ‘இடுப்பழகி’ என அன்புடன் அழைக்கப்பட்டவர், சிம்ரன். 90களிலும் 2000 ஆண்டுகளிலும் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் இவர் முதன் முதலாக நடித்த படம், நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதன் பிறகு இவர் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து படங்களில் நடித்து விட்டார்.
சிம்ரன், 2022ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘மகான்’ படத்தில் துருவ் விக்ரமிற்கு தாயாக நடித்திருந்தார். இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் மட்டுமன்றி 2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்திலும் நடிகர் சூர்யாவிற்கு தாயாக நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த சிம்ரன், 2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு குட்டி ப்ரேக் எடுத்தார். இதையடுத்து தமிழில் அவர் கம்-பேக் கொடுத்த படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இதில் அவர் கௌரவ தோற்றத்தில் வந்தார்.
ஹீரோயினாக நடித்து வந்த சிம்ரன், குணச்சித்திர வேடங்களிலும், அம்மா-அண்ணி கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். சீமராஜா படத்தில் சமந்தாவிற்கு வில்லி-சித்தியாக அந்த இவரை பார்ப்பதற்கே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
சிம்ரன், 2003ஆம் ஆண்டு தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறு வயது நண்பர்களான இவர்கள் ஒரு கட்டத்தில் காதலித்து பின்னர் கரம் பிடித்துக்கொண்டனர்.
சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், மூத்த மகன் பெயர் அதீப் பாகா. இவர், 2005ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்போது 18 வயதாகிறது.
சிம்ரனுக்கு இரண்டாவதாகவும் ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர், ஆதித். சிம்ரன், தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதான் சிம்ரனின் மூத்த மகன் அதீப் பகாவின் புகைப்படம். மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் இவரது புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.