சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?
கோலிவுட் திரையுலகின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருந்தவர் வடிவெலு. இவரது டைலாக் வருவதற்கு முன்பே, உடல்மொழியை பலரையும் சிரிக்க வைத்துவிடும்.
சில வருடங்கள் தமிழ் திரையுலகில் தலைக்காட்டாமல் இருந்தவர், தற்போது மாமன்னன் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். காமெடி மட்டுமன்றி, தன்னால் வலுவான கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியும் என்று காண்பித்தவர் அவர்.
வடிவேலு, தொடர்ந்து படங்களில் நடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவர் ஹீரோவாகனடித்த ஓரிரண்டு படங்கள் நன்றாக ஓடினாலும், ஒரு சில படங்கள் மண்ணை கவ்வின. இதனால் இனி இவர் காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வடிவேலு ஒரு டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சூரியனின் ஆங்கில பெயரை கொண்ட முன்னணி டிவி சேனலில், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இதன் பெயர், ‘டாப் குக் டூப் குக்’.
வடிவேலு, தற்போது சின்னத்திரையில் எண்ட்ரி கொடுக்கவுள்ள தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
வடிவேலு அடுத்து, பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.