வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்பு
அதன் ஒருபகுதியாக வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது மிக மிக எளிமையாகும்.
இதில் இருக்கும் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் 500 யூனிட்டுகளுக்கும் மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் மட்டுமே வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இப்போது வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம். அதாவது, 94987 94987 என்ற (TANGEDCO) தமிழ்நாடு மின்சார வாரிய மொபைல் எண்ணை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
மின்சார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் மின் கட்டணத்துக்கான செய்தி வாட்ஸ்அப் மூலம் வரும். அதனை நீங்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலி மூலம் ஈஸியாக செலுத்திக் கொள்ளலாம்.
மின்சார கட்டணத்தை கூகுள் பே உள்ளிட்ட எந்த யுபிஐ செயலிகள் மூலம் நொடியில் செலுத்திவிட முடியும். உதாரணத்துக்கு நீங்கள் கூகுள் பே வைத்திருக்கிறீர்கள் என்றால், அதில் Pay Bills என்ற ஆப்சனை ஓபன் செய்ய வேண்டும்.
அதில் EB Bills என்ற ஆப்சன் இருக்கும். அதில், உங்கள் EB Bill எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். இதன்பிறகு மாதந்தோறும் உங்கள் கூகுள் பே Pay Bill ஆப்சனில் மின் கட்டணம் குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும்.
இந்த ஆப்சனில் சில நொடிகளில் உங்களின் மின்சார கட்டணத்தை கட்டிவிட முடியும். எவ்வளவு பில் என்ற விவரமும் சேர்ந்தே வரும் என்பதால், பில் எவ்வளவு என்பது குறித்த கவலை நுகர்வோருக்கு தேவையில்லை.