அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?

Sun, 15 Dec 2024-5:05 pm,

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான (Tamil Nadu Pongal Gift Pack) டோக்கன் கொடுக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியதும் 2 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.

இந்த ஆண்டும் அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்தமுறை பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு, துணிப்பை ஆகிய 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டது.

இந்த முறை இதேபோன்ற பொங்கல் பரிசுத் தொகுப்பே ரேஷன் அட்டை தாரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (Ration Card) கிடைக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் சில வரைமுறைகளை வைத்திருக்கிறது. 

அதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். இலங்கை மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களும் வாங்கிக் கொள்ளலாம். அரிசி ரேஷன் அட்டைகளை (Rice Ration Card) தவிர்த்து பிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது. 

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு உடன் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அந்த ஆயிரம் ரூபாய் தொகையும் அரிசி அட்டைத்தார்களுக்கு மட்டுமே கிடைக்கும். சர்க்கரை ரேஷன் அட்டை உள்ளிட்ட பிற எந்த வகையான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் ஆயிரம் ரூபாய்பெற முடியாது.

இதனால் தை மாதம் அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது. ஏனென்றால் கலைஞர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளாக இருப்பவர்கள் தமிழ்நாடு அரசின் 2 ஆயிரம் ரூபாய் பெற வாய்ப்புள்ளது. அவர்களுக்கு தை மாத பொங்கல் பரிசுத் தொகையாக 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என இரண்டும் கிடைக்கும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தை பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் நேரடியாக பயனாளிகளிடமே கொடுக்கப்படும். 

அதேபோல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பிற பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றால், உரிய கடை குறித்து பயனாளிகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் புகார் அளிக்கலாம். 

ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிட்ட யாரேனும் முறைகேடு செய்தால் அல்லது தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் அப்போதே அங்கிருந்தே உயர் அதிகாரிகளுக்கு நீங்கள் புகார் அளிக்கலாம். ஒவ்வொரு ரேஷன் கடைகள் முன்பும் ரேஷன் கடை புகார் அளிப்பதற்கான மொபைல் எண் ஒட்டப்பட்டிருக்கும். 

இல்லையென்றால் நீங்கள் வட்டார உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் எந்த முறைகேடும் செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு கண்டிப்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link