பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (TN Government Schools) 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மூன்று பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு பருவத்திற்கும் தேர்வுகள் நடைபெறும்.
அப்படியிருக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் (Half Yearly Exams) டிச. 9ஆம் தேதி முதல் டிச. 23ஆம் தேதிவரை நடைபெற்றது.
தொடர்ந்து, டிச. 24ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி (இன்று) வரை அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
ஜன.2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் முன்னரே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஜன. 2ஆம் தேதியான நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என சந்தேகங்கள் பலருக்கும் எழுந்தன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் பின்னர் வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு ஏதுவாக அரையாண்டு விடுமுறைகள் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக, ஜன.2 மற்றும் 3 தேதிகளில் விடுமுறை அறிவித்தால், ஜன.4,5 ஆகிய வார இறுதி நாள்களிலும் விடுமுறை அறிவித்தால் ஜன. 6ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன.
குறைந்தபட்சம் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலாவது அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அரையாண்டு தேர்வுக்கு பின்னர் விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜன. 2 (நாளை) அன்று திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் (School Reopening) என பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் (Directorate Of School Education Department) தற்போது தகவல் அளித்துள்ளது.