School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்

Wed, 27 Nov 2024-7:34 am,

வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது மாறியுள்ளது. இந்த நிலையில் இது இன்றுபுயலாக வலுபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு ஃபெங்கல் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (School Leave Today) அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்கள் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சேர்ந்தும் விடுமுறை அறிவித்துள்ளன

திருவாரூர் மாவடத்தை பொறுத்துவரை இன்று கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் தி . சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்   மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். 

இதேபோல், கடலூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை. கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ( 27.11.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். 

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இதுவரை (27/11/24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள்: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம். பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகும். இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எதிரொலி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை எச்சரிக்கை விடுத்ததை தொடரந்து கடலூர் அரசு கலை கல்லூரியில் இன்று (27.11.2024) நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ம் தேதிக்கு நேர்முகத் தேர்வை ஒத்திவைத்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவு.

இதேபோல், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link