இந்த தீபாவளி திருநாளுக்கு OTT இல் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள்!
சூரரைப் போற்று 2020ஆம் அண்டு வெளிவரயிருக்கு ஒரு அதிரடி தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பெண் இயக்குனர் ஆன சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தை சூர்யா தயாரித்து உள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களாக சூர்யா மற்றும் அப்பர்ணா பலாமுரலி அகியோர் நடித்து உள்ளனர்.
மூக்குத்தி அம்மன் கிய வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி இந்து பக்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு ஆண் முன்னணி கதாபாத்திரமாகவும் நடிக்கிறார். நயன்தாரா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். இந்த படம் மே 2020 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடும் நோக்கில் திரையரங்கு வெளியீடு கைவிடப்பட்டது.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து 'அந்தகாரம்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார் அட்லி. இந்தப் படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனால், ஓடிடி வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உறுதியானாலும், படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருந்தது.இறுதியாக, நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது.
விக்னாராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமசந்திரன், மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராஜா ராமமூர்த்தி இயக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளார். முதல்முறையாகக் கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.