சொந்த வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 3,50,000 ரூபாய் நிதியுதவி! யார் யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசு ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி உள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற அடிப்படியில் அரசு வீடு கட்டுவதற்கு 3.50 லட்சம் தருகிறது.
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். கலைஞரின் கனவு இல்லத் திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அஸ்திவாரம் கட்டும் போது, ஜன்னல்களை வைக்கும் போது, கூரையை அமைக்கும் போது, கட்டுமானத்தில் எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பொறுத்து வீடுகளை கட்டுபவர்களுக்கு நான்கு பகுதிகளாக பணம் வழங்கப்படும்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லாத குடும்பங்கள், மட்டுமே இந்தத் திட்டத்தில் உதவி பெற முடியும். மேலும், செங்கல் மற்றும் சிமெண்டால் ஆன வீடு ஏற்கனவே இருந்தால் அவர்களால் இந்த உதவியை பெற முடியாது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, தொலைபேசி எண், வாக்காளர் அட்டை, பான் கார்டு, உங்களின் புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் உங்கள் வீட்டு முகவரி போன்ற சில முக்கியமான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
TANCEM நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் சிமென்ட் பெற்று கொள்ளலாம். அதற்காக இதுவரை 48 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். கூடுதலாக, அரசு நிர்ணயித்த விதிகளைப் பின்பற்றி, சரியான சப்ளையர்களிடமிருந்து இரும்புக் கம்பிகளை வாங்கி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2024-25 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு 100,000 வீடுகளை தமிழக அரசு விரைவாக கட்டித்தருகிறது. கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அவர்களின் வீடுகளுக்கு விரைவில் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.