கார்களின் விலை குறைக்கும் டாடா.... வாங்க தயாராக இருங்க மக்களே..!
போட்டியாளர்களின் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகங்களுக்கு மத்தியில், தனது தலைமை இடத்தை தக்கவைக்க கொள்ளவும், விலையில் மாற்றங்கள் செய்தும், புதிய உக்திகளை நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் புகுத்தி வருவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, நெக்ஸான் ஆரம்ப விலை ரூ.14.99 லட்சமாக இருந்த நிலையில், இப்போது நெக்ஸான் எலக்ட்ரிக் மேக்ஸ் காரின் விலை ரூ.16.49 லட்சத்தில் தொடங்கி ரூ.18.99 லட்சம் வரை செல்கிறது.
அதே வேளையில், டாடா மோட்டார்ஸ், நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் ரேஞ்சானது 437 கிலோ மீட்டரிலிருந்து 453 கிமீ வரை உயர்த்துவதற்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். அதன் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் தற்போதைய நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் ரக உரிமையாளர்களுக்கும் இந்த வசதி பிப்ரவரி 15, 2023 முதல் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் பணிகளை டாடா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. அதன் புதிய வகையான நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் XM-இன் டெலிவரிகள் ஏப்ரல் 2023 முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி தலைவர்-மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் சேவை வியூகத்தின் தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில், நிலையான போக்குவரத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு ஆட்டோமேக்கரான நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில், மஹிந்திரா & மஹிந்திரா தனது எலக்ட்ரிக் எஸ்யூவி-யான எக்ஸ்யூவி 400-ஐ ரூ.15.99 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்த ஆண்டு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகும் மற்ற நிறுவனங்களும் உள்ளன.