ஸ்காட்லாந்து அணியை வென்று விராட் கோலிக்கு பிறந்த நாள் பரிசளித்த இந்திய அணி
விராட் கோலியின் 33வது பிறந்தாளன்று 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்தவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 205 இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை விராட் பதிவு செய்தார். இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி, 65 போட்டிகளில் விளையாடி 38 வெற்றிகளைப் பெற்று, இந்தியாவின் மிகச் சிரந்த டெஸ்ட் கேப்டனாக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். கோஹ்லி மொத்தம் 443 சர்வதேச போட்டிகளில் விளையாடி 70 சதங்கள் அடித்துள்ளார். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு கோஹ்லி முன்னேறிவிடுவார்
விராட் கோலி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசிய கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018-19 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கோஹ்லி இந்திய அணி சாதனை வெற்றியை படைத்து, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 93 போட்டிகளில் 3225 ரன்கள், 52.01 என்ற அற்புதமான சராசரியை வைத்துள்ளார் விராட் கோஹ்லி