WhatsApp DigiLocker: இனி வாட்ஸ்ஆப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறலாம்

Wed, 25 May 2022-3:41 pm,

டிஜிலாக்கர் சேவைகள் இப்போது வாட்ஸ்அப் மூலம் MyGov ஹெல்ப் டெஸ்கில் கிடைக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சீரான நிா்வாகத்தை உறுதிசெய்து, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் அரசின் சேவைகள் இணைய வழியில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் பான் கார்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் செயலியில் சேகரித்து வைத்துக்கொள்ள முடியும்.

MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் பயனர்கள், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), வாகன காப்பீடு - இரு சக்கர வாகனம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், காப்பீடு ஆவணம் போன்றவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.

டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்ஆப் வாயிலாகப் பெற 9013151515 என்ற எண்ணுக்கு ‘Hi' என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலமாக அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெற முடியும்

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் உருவாக்கப்பட்டது. முன்னதாக, இது MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் என இருந்தது. இது தடுப்பூசி முன்பதிவுகள் மற்றும் நோய்த்தடுப்புச் சான்றிதழ் பதிவிறக்கங்கள் போன்ற தொடர்புடைய தகவல்களை வழங்கியது. 

இதன் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டுள்ளனர்.மேலும் 33 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Digilocker போன்ற புதிய சேவைகளுடன் குடிமக்களுக்கு டிஜிட்டல் மூலம் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதற்கான விரிவான நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link