ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவா மொபைல் வேணுமா... தரமான மாடல்கள் அமேசானில் கொட்டிக் கிடக்குது!

Wed, 27 Dec 2023-8:20 pm,

புத்தாண்டு பிறக்கப்போகிறது, நடப்பு 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்த நேரத்தில் பலரும் புதிய ஸ்மார்ட்போன் வாங்கவும் அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்கவும் விரும்புவார்கள்.

 

அந்த வகையில், பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை மலிவாக வாங்க நினைத்தால், டெக்னோ நிறுவனம் உங்களுக்காக பல விருப்பங்களை வழங்குகிறது. டெக்னோவில், சிறந்த அம்சங்கள் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்கலாம்.

 

அமேசான் மூலம் 7000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு காணலாம்.

Tecno Spark 9: இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்டை அமேசான் நிறுவனத்தில் இருந்து 6499 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர 315 ரூபாய்க்கு மாதத் தவணையிலும் இதனை வாங்கலாம். இதன் முக்கிய அம்சங்களை பார்த்தால், 90Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், MediaTek Helio G37 பிராஸஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில்13MP முதன்மை கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. போனின் பேட்டரி 5000mAh ஆகும்.

Tecno Spark GO 2024: இந்த போனின் 8ஜபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 6999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 339 ரூபாய்க்கு மாதத் தவணை செலுத்தியும் இதனை பெறலாம். இந்த போனில் 6.56 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் T606 பிராஸஸர், 13MP பின்பக்க கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 

Tecno Pop 7 Pro: இந்த மொபைலின் 2ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 5699 ரூபாய் என பட்டியலிடப்பட்டுள்ளது. 339 ரூபாயில் இருந்து மாதத் தவணை செலுத்தி நீங்கள் இந்த மொபைலை வாங்கலாம். ஃபோன் 6.56 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் T606 பிராஸஸர், 13MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

Tecno Pop 5 LTE: இந்த ஸ்மார்ட்போனின் 2ஜிபி RAM மற்றும் 32ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட் அமேசானில் இருந்து 6299 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனை 305 ரூபாய் மாதத் தவணையில் நீங்கள் வாங்கலாம். இந்த போனில் 6.52 இன்ச் டிஸ்ப்ளே, 8MP கேமரா, 5000mAh பேட்டரி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link