உங்க போனை சார்ஜ் செய்யும் போது... இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க

Tue, 17 Sep 2024-10:49 am,

ஸ்மார்ட்போன் இல்லாமல் சில மணி நேரம் என்ன, சில நிமிடங்கள் கூட செலவிட முடியாது. ஆன்லைனில் பணம் செலுத்துவது முதல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி வரை எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகிவிட்டது.

அலுவலகம் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன், சீராக இயங்க அவ்வப்போது சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், போனை சார்ஜ் செய்யும் போது சில தவறுகள் செய்தால், உங்கள் போன் வெடித்துவிடும் அபாயம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சார்ஜ் செய்யும் போது தொலைபேசியைப் பயன்படுத்துதல்: ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது, அதில வர்டும் அழைப்புகளை எடுத்து பேசுவதோ, அல்லது வேறு காரணங்களுக்கான அதனை பயன்படுத்துவதும் தவறு. இப்படிச் செய்வதன் மூலம் போன் அதிக வெப்பமடைந்து பேட்டரி வெடிக்கலாம்.

தவறான சார்ஜரை பயன்படுத்துதல்: பல நேரங்களில் தொலைபேசியை சார்ஜ் செய்ய ஒரிஜினல் சார்ஜ்ரை அல்லாமல், டூப்ளிகேட் சார்ஜரையோ அல்லது வேறு விதமான சார்ஜரையோ . ஆனால், உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த அசல் சார்ஜரை எப்போதும் பயன்படுத்தவும். தவறான அல்லது போலி சார்ஜர் தொலைபேசியை சேதப்படுத்தும். 

வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் தொலைபேசியை சார்ஜ் செய்தல்: நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் அல்லது வெப்பம் அதிகம் உள்ள சூடான இடத்தில் வைத்து ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வது அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இது பேட்டரி ஆயுளைக் குறைக்கலாம். அதோடு தொலைபேசி சேதமடையக்கூடும்.

தொலைபேசியை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்தல்: பல நேரங்களில் நம்மில் பலர், இரவு முழுவதும் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வழக்கம் உள்ளது. இதைச் செய்வதைத் தவிர்க்கவும். தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது பேட்டரியை சேதப்படுத்தும். 90% சதவிகிதம் சார்ஜ் ஆனவுடன், அதனை எடுத்து விடுவது நல்லது.

தொலைபேசியை மிக குறைவாக சார்ஜ் செய்தல்: ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஃபோனை பாதி சார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் பேட்டரி ஆயுள் குறைகிறது.

உங்கள் ஃபோன் பேட்டரி நீடித்து இருக்க, பேட்டரி பவர் முழுமையாக தீரும் வரை கண்டுகொள்ளாமல் பல பயனர்கள் அதன் பேட்டரி முற்றிலும் செயலிழக்கும் வரை தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். பேட்டரி முற்றிலும் செயலிக்கும் வரை காத்திருக்கக் கூடாது. பேட்டரி 20 சதவீதம்  இருக்கும் போதே சார்ஜ் செய்யும் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link