Thailand: அதிகரிக்கும் கடல் நீர்மட்டம், பாங்காங்கின் தலைநகர் அந்தஸ்தை பறிக்குமா?
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டு தலைநகரை மாற்றுவது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்தோனேசியா தனது தலைநகரான ஜகார்த்தாவை விட்டு விலகி, நுசந்தாராவை தலைநகராக மாற்றவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய தலைநகர மாற்றம் நடைபெறும்
இந்தோனேசியாவைப் போலவே, தாய்லாந்தும் தனது தலைநகரை மாற்றும் காலம் வெகுதூரம் இல்லை என்று கருதப்படுகிறது. ஏனென்றால், தாய்லாந்து தலைநகர் பாங்காங், கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன
மழைக்காலத்தில் ஏற்கனவே படும் பிரச்சனைகளை பார்க்கும்போது, தாய்லாந்து அரசு தலைநகரை மாற்றும் முடிவை விரைவில் எடுத்துவிடும் என்று மக்கள் கருதுகின்றனர்.
மழைக்காலத்தில் கடலுக்கு வந்து சேரும் அதிகப்படியான நீர் ஏற்படுத்தும் பிரச்சனையால் பாங்காக் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வழக்கமாகிவிட்டது
பருவநிலை மாற்றம்: தாய்லாந்து 2050 க்குள் கார்பன் நடுநிலையையும், 2065 இல் நிகர பூஜ்ஜியத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது.
கால்நிலை மாற்றத்தினால், அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியுடன் போராடும் இந்தோனேசிய விவசாயிகள், பவளப்பாறைகள் பிரச்சனை, மாசுபாடு என பல பிரச்சனைகளை தாய்லாந்து எதிர்கொண்டுள்ளது
தற்போதைய நிலைமை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் பாங்காங் மூழ்கிவிடும் என்று அஞ்சப்படுவதால், தலைநகரை மாற்றலாமா என்ற ஆலோசனை தொடங்கிவிட்டது