Super Moon: இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவு இன்று வானில் தோன்றும்
இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தோன்றும். இது பக் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த மாதமும் சூப்பர் மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர் மூன் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை. இன்று தோன்றும் சூப்பர் நிலவை இந்தியாவில் வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து பார்க்க முடியும்.
சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை வரை தோன்ற கூடும். சூப்பர் மூன் என்பது வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும்இருக்கும். பக் நிலவு பூமியிலிருந்து 357,264 கிமீ தொலைவில் தெரியும்.
2022 இன் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது சூப்பர் மூன் இந்த வாரம் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என நாசா கூறுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலாவை பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.