Female ship captain: சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்

Mon, 05 Apr 2021-4:48 pm,

மார்வா எல்செல்தார், அலெக்ஸாண்ட்ரியாவில் ஐடா IV (Aida IV in Alexandria) இல் இருந்தபோது, ​​எவர் கிவன் என்ற பெரிய கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயில் நின்றுவிட்டது. இதனால், எகிப்தின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமான சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.

வதந்திகள் மற்றும் போலி செய்தி தலைப்புச் செய்திகள் என்பது தவிர்க்க முடியாமல் போன காலம் இது. சூயஸ் கால்வாயில் எவர் கிவன் (Ever Given) கப்பல் தேங்கி நின்றதற்கு கேப்டன் மார்வா தான் காரணம் என்று செய்திகள் குற்றம் சாட்டின. சூயஸ் கால்வாய் சம்பவத்திற்கு மார்வாவைக் குற்றம் சாட்டியது ஒரு அரபு நாட்டு ஊடகம் வெளியிட்ட போலிச் செய்தி என்று தெரியவந்துள்ளது.

சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தேக்கத்தை ஏற்படுத்தியவர் எகிப்தின் முதல் பெண் கேப்டன் மார்வா எல்செலெதார் என்று சமூக ஊடகங்களில் அவர் விமர்சிக்கப்படுகிறார். ஆனால், உண்மையில் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சமயத்தில், சம்பந்தப்பட்ட கப்பலில் 230 மைல் தொலைவில் வேறு படகில் அவர் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.  

"நான் இந்த துறையில் ஒரு வெற்றிகரமான பெண் என்பதால் அல்லது நான் எகிப்து நாட்டு பெண்ணாக இருப்பதால் நான் குறிவைக்கப்பட்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன், ஆனால் இதை நான் நிச்சயமாகத் சொல்லிவிட முடியாது. என்னை குற்றம்சாட்டிய போலி கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது, எனவே தான் அது மற்ற நாடுகளுக்கும் துரிதமாகப் பரவியது. கட்டுரை மிகவும் எதிர்மறையானது மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆனால் சாதாரண பொதுமக்களும், என்னுடன் பணிபுரிபவர்களும் எனக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர். நான் நேர்மறையாக இருக்க விரும்பினேன். எனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் அன்பில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். போலிச் செய்தியால் ஏற்பட்ட என் கோபம், ஆதரவு அளித்தவர்களின் அன்பால் நன்றியுணர்வாக மாறியது.  இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் முன்பை விட மிகவும் பிரபலமானேன்” என்று மார்வா எல்செலஹார் தனது மன உணர்வுகளை வெளிப்பத்துகிறார். "

மார்வாவின் கடலை நேசிப்பவர் மற்றும் அவரது சகோதரர் அரபு அகாடமி ஃபார் சயின்ஸ் டெக்னாலஜி & மரைடைம் டிரான்ஸ்போர்ட்டில் (AASTMT) பணிக்கு சேர்ந்திருந்தார். எனவே மார்வா வணிகக் கடற்படையில் சேர முடிவு செய்தார்.

அந்த சமயத்தில் அகாடமி ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனால் எகிப்தின் அப்போதைய அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் சட்ட மறுஆய்வுக்குப் பிறகு சேர மார்வாவின் விருப்பம் பரிசீலிக்கப்பட்டு, கேப்டனாக அனுமதி வழங்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link