தண்ணீர் இல்லாமல் தவிக்கும் இந்த பிரபல நகரங்களைப் பற்றித் தெரியுமா?
இஸ்தான்புல்: இஸ்தான்புலில் வெறும் 45 நாட்களில் தண்ணீர் தீர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கி கடந்த 10 ஆண்டுகளில், தற்போது மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
மெக்ஸிகோ நகரம்: மெக்ஸிகோ நகரத்தில் சுமார் 21 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர். மெக்ஸிகன் தலைநகரில் நீர் பற்றாக்குறை புதிய விஷயம் அல்ல. அங்கு தண்ணீர் நெருக்கடி மிகவும் அதிகான அளவில் உள்ளது. இந்த நகரம் தேவைக்கான நீரில் 40 சதவீத நீர் தொலைதூர இடங்களிலிருந்து இறக்குமதி செய்கிறது.
மாஸ்கோ: மாஸ்கோவின் நீர் தேவையில் 70 சதவீதத்தைக் கொடுப்பது அதைவிட மேலான இடங்களில் அமைந்துள்ள நீர் தேக்கங்கள் தான். ரஷ்யாவில் ஏராளமான நன்னீர் வளம் இருந்தாலும், அங்கு நிலவும் பரவலான மாசுபாட்டினால், சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தண்ணீர் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
சாவ் பாலோ: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நகரங்களில் சாவ் பாலோவும் இடம் பெற்றுள்ளது. இந்த நகரம் தண்ணீரை கவனமாக பயன்படுத்த வேண்டும். 2015 ஆம் ஆண்டில் நீர் நெருக்கடியின் உச்சத்தில் சிக்கித் தவித்தது சாவ் பாலோ. இந்த நகரில் 21.7 மில்லியன் குடியிருப்பாளர்கள் இருக்கின்றனர்.
டோக்கியோ: டோக்கியோவில் அபரிதமாக மழை பெய்யும், ஆனால் ஆண்டின் நான்கு மாதங்களில் மழை கொட்டித் தீர்த்துவிடும். தண்ணீரை சேகரித்து, சேமித்து, உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் எதிர்பார்த்த மழையை விட குறைவாக விளைந்தால், அது நகரவாசிகளின் தண்ணீர் பிரச்சனையை அதிகரிக்கும்.
கெய்ரோ: நைல் நதிக்கரையில் அமைந்துள்ள கெய்ரோ தண்ணீர் நெருக்கடியை சந்திக்கிறது என்பது ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், நைல் நதி இன்னும் எகிப்தின் உயிர்நாடியாகத் தான் இருக்கிறது. ஆனால் கெய்ரோவில் 2025ஆம் ஆண்டுக்குள் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று ஐ.நா.கூறுகிறது.