தந்தையையே முதலமைச்சராக பெற்ற முதல்வர் மகன்கள்

Thu, 29 Jul 2021-9:54 pm,

தந்தை-மகன் முதலமைச்சர் பட்டியலில் முதலிடம் பிடிப்பது தமிழகம் தான். தற்போதைய தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி மாநில முதலமைச்சராக இருந்துள்ளார். 

ஆந்திராவின் ரெட்டி குடும்பத்தின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. தற்போதைய ஆந்திராவின் முதல்வராக பதவி வகிக்கும் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, 2019 ஆம் ஆண்டில் முதல்வராக ஆனார். இதற்கு முன்பு அவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004 முதல் 2009 வரை முதலமைச்சராக இருந்தார்.

பொம்மை குடும்பத்திற்கு முன்பு, கர்நாடகாவில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மற்றொரு தந்தை-மகன் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவும் கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். இதன் பின்னர் அவரது மகன் எச்.டி. குமாரசாமியும் மாநில முதல்வரானார்.

ஒடிசாவின் பட்நாயக் குடும்பத்தின் பெயரும் தந்தை மற்றும் மகன் முதல்வர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிஜு பட்நாயக் இரண்டு முறை ஒடிசாவின் முதல்வராகவும், அவரது மகன் நவீன் பட்நாயக் தற்போதைய மாநில முதல்வராகவும் இருக்கிறார், அவர் மார்ச் 2000 இல் ஆட்சியைப் பிடித்தார்.

ஜார்க்கண்டில் நடந்த கடைசி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் முதல்வரானார். முன்னதாக அவரது தந்தை ஷிபு சோரனும் ஜார்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்தார்.

தந்தை-மகன் முதலமைச்சர்களாக பதவி வகிக்கும் பட்டியலில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தந்தை பி.ஏ.சங்மா 1988 முதல் 1990 வரை மேகாலயாவின் முதல்வராக பதவி வகித்தார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் அவரது தந்தை டோர்ஜி காண்டு ஆகியோரும் மாநில முதல்வர்களாக இருந்துள்ளனர். பெமா காண்டு 2019 முதல் மாநில முதல்வராகவும், அவரது தந்தை டோர்ஜி காண்டு 2007 முதல் 2011 வரை முதல்வராகவும் இருந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் அப்துல்லா குடும்பத்தின் பெயர் தந்தை-மகன் முதல்வராகும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் ஷேக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீரின் முதல்வரானார், அதன் பிறகு அவரது மகன் பாரூக் அப்துல்லா மாநிலத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.

அப்துல்லா குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு முதலமைச்சராகும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஷேக் அப்துல்லா மற்றும் பாரூக் அப்துல்லாவுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றிய தந்தை-மகன் ஜோடிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அகிலேஷ் யாதவ் 2012 ஆம் ஆண்டில் தனது 38 வயதில் உத்தரபிரதேச முதல்வராக ஆனார், 2017 வரை ஆட்சியில் இருந்தார். முலாயம் சிங் யாதவ் மூன்று முறை உத்தரபிரதேச முதல்வராக இருந்துள்ளார்.

தந்தை-மகன் முதலமைச்சர் பட்டியலில் பாஹுகுனா குடும்பத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. விஜய் பாஹுகுனா 2012 முதல் 2014 வரை உத்தரகண்ட் முதல்வராக இருந்தார். முன்னதாக, அவரது தந்தை ஹேம்வதி நந்தன் பாஹுகுனா உத்தரபிரதேச முதல்வராக இருந்தார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவனின் பெயரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது தந்தை சங்கர் ராவ் சவான் (Shankarrao Chavan) மகாராஷ்டிரா முதல்வராகவும் இருந்துள்ளார்.

தந்தை மற்றும் மகன் முதல்வராகும் பட்டியலில் ஹரியானாவின் சவுதலா குடும்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் சவுதாலாவைத் தவிர, அவரது தந்தை தேவி லால் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link