வேலை தேடுகிறீர்களா; உங்களுக்கான டாப் ‘5’ டிஜிட்டல் செயலிகள் இதோ..!

Sun, 31 Oct 2021-2:55 pm,

வேலை தேடுபவர்களுக்கான டிஜிட்டல்  செயலிகளில் ​​லிங்க்ட்இன் முதலிடம் வகிக்கிறது. மிகவும் பிரபலமான தளம், இங்கு உங்கள் பிரொபைலை உருவாக்கி, மக்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு  எளிதாக வேலை தேடலாம்.

Hirect செயலி ஸ்டாரட்அப்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது  சேட் அடிப்படையிலான வேலை தேடுபவர்களுக்காஅன் செயலி ஆகும் . இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் இதில் இணைந்துள்ளன.

 

Job recruiter செயலியுன் உதவியுடன், உங்களுக்கான வேலையை எளிதாகக் கண்டறியலாம். இந்த செயலியில் வேலை தேடுபவர்களுக்கும் காலர் ஐடி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

மிகவும் பிரபலமான வேலை வாய்ப்புக்கான செயலியான மான்ஸ்டரில் (Monster), நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றலாம், இதன் அடிப்படையில், நிறுவனங்கள் தங்கள் தேவைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும். மேலும், இங்கே நீங்கள் உங்கள் தொடர்பு விவரங்களையும் கொடுக்கலாம், இதனால் நிறுவனங்கள் உங்களுடன் நேரடியாகப் பேசலாம்.

Workable ஒரு ஆண்ட்ராய்டு செயலி, இதில் Personal Profile, Score card, Evaluation மற்றும் ரிபோர்ட் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது, மேலும் இந்த செயலியில் உங்கள் நேர்காணலையும் திட்டமிடலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link