வயதான தோற்றத்தை தாமதப்படுத்த இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் போதும்
நெய் சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். வறண்ட சருமத்திற்கு நெய் தடவினால் நன்மை பயக்கும்.
மாதுளையில் பாலிஃபீனாலிக் கலவைகள் உள்ளதால் இவை சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.
மூலிகை டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை போக்க உதவும்.
சருமத்தில் பொலிவை பெற வேண்டுமானால் ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள். இவை முகத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, வறண்ட சரும பிரச்சனையை போக்க உதவும்.
அழகான சருமத்திற்கு குங்குமப்பூ சிறந்தது. குங்குமப்பூ சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்ற உதவும். மேலும், கருமப்புள்ளிகள், தழும்புகளை போன்றவற்றை நீக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.