இந்தியாவின் மிக ஆபத்தான 5 விஷ பாம்புகள் இவையே
King Cobra: தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.
Common krait: இந்தியாவிலேயே அதிக விஷமுள்ள பாம்பாக இது கருதப்படுகிறது. இது கடித்த பிறகு, ஒரே நேரத்தில் வெளியேறும் விஷம் 60 முதல் 70 பேரைக் கொன்றது. இரவில் தூங்குபவர்களை மட்டும் தாக்குவது இதன் சிறப்பு. இது மக்களின் கை, கால், வாய் மற்றும் தலையை தாக்குகிறது.
Indian cobra: இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். இந்த பாம்பு எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் இந்த பாம்புகள் எளிதில் காணப்படும். அதன் கடியிலிருந்து மனிதன் தப்பிப்பது மிகவும் கடினம். இந்த பாம்பின் நீளம் 1 மீ முதல் 1.5 மீ (3.3 முதல் 4.9 அடி) வரை இருக்கும்.
Russell's Viper: இந்த பாம்பு நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது இந்திய க்ரைட்டை விட அதிக விஷம் இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேரைக் கொன்றுவிடுகிறது.
Saw-scaled vipers: இந்த பாம்பின் நீளம் சிறியது, ஆனால் இது மிகவும் ஆபத்தான பாம்பாகும். இதன் கடியால் ஆண்டுக்கு சுமார் 5000 பேர் இறக்கின்றனர். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.