கார் வாங்கப்போறீங்களா? பணத்துக்கு மதிப்பளிக்கும் டாப் 5 கார்கள் இவைதான்

Wed, 03 Nov 2021-2:53 pm,

ஹூண்டாயின் கிராண்ட் ஐ 10 நியோஸின் டீசல் வேரியன்ட் எண்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் சிறந்த மைலேஜ் வழங்குகிறது. இந்த பிரிவில் டீசல் எஞ்சினுடன் வரும் மிகச் சில கார்களில் Grand i10 Nios ஒன்றாகும். ARAI பதிவுகளின்படி, டீசல் மாறுபாடு 25 kmpl வரை மைலேஜ் தருகிறது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ARAI சான்றளிக்கப்பட்ட வரம்பில் 21 kmpl வரை கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கார் உற்பத்தியாளர்களில், சிறந்த மைலேஜ் கார்களில் மாருதி கார்களுக்கு முக்கிய இடம் உள்ளது. மாருதி, சில  பெட்ரோல் வகைகளில் மட்டுமே புதிய ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேனுவல் வேரியன்ட் 23 kmpl-ஐ விட சற்றே அதிக லாபத்தை அளிக்கும் அதே வேளையில், ஆடோமேடிக் வேரியன்ட் 23.76 kmpl என்ற ARAI சான்றளிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். இதன் சிறப்பம்சங்கள் மட்டுமின்றி மைலேஜும் இதற்கு காரணங்களாக அமைந்துள்ளன. ARAI இன் கூற்றுப்படி, ஹூண்டாய் i20 டீசல் வகைகளில் 25.2 kmpl மைலேஜ் கொடுக்கும். அதே நேரத்தில் பெட்ரோல் மானுவலிலன் வரம்பு 20.35 kmpl ஆகும்.

சமீபத்திய காலங்களில் மாருதியின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றான மாருதி பெலினோ, ஹூண்டாய் i20யின் மைலேஜுக்கு சவாலாக அமைந்துள்ளது. பெலினோ, பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவல் டியூவல்ஜெட் வேரியண்ட்டில் 23.87 kmpl வரம்பை வழங்குகிறது. ARAI படி, ஸ்டாண்டர் மானுவல் வகைகள் 21 kmpl க்கும் அதிகமான மைலேஜ் கொடுக்கின்றன.

சப்காம்பாக்ட் செடான் பிரிவு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. Hyundai Aura மைலேஜ் அடிப்படையில் சிறந்த கார்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ARAI தரவுகளின்படி, ஆராவின் டீசல் மேனுவல் வேரியன்ட் 25 kmpl மைலேஜ் கொடுக்கிறது. இது 28 கிமீ/கிலோ மைலேஜ் தரும் சிஎன்ஜி வேரியண்டையும் கொண்டுள்ளது. ஆராவின் பெட்ரோல் மானுவல் மைலேஜ் 21 kmplஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link