Electric Cars: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5 எலெக்ட்ரிக் கார்கள்

Wed, 02 Nov 2022-2:00 pm,

டாடா மோட்டார்ஸ், சமீபத்தில் நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் காரான டாடா டியாகோவை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

டாடா டைகோர் என்பது டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் செடான் கார் ஆகும். 26 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இந்த காரின் விலை ரூ.12.24 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

டாடாவின் மூன்றாவது எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸானின் எலெக்ட்ரிக் பதிப்பிற்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த காரின் விலை ரூ.14.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் 392 kWh லித்தியம் அயன் நிரம்பிய எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனாவும் சிறந்த தேர்வாகும். இந்த கார் ரூ.23.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

BYD எலெக்ட்ரிக் கார் BYD eSix 717 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. நிறுவனம் இந்த காரை ரூ.29.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்கிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link