தாலிபான் ஆட்சிக்கு முன்னும் பின்னும்: பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்..!!!
முன்னதாக ஆப்கானிலும், மற்ற நாடுகளைப் போலவே, பெண்கள் வீட்டிற்கு வெளியில் சென்று, சந்தைகளில் ஷாப்பிங் செய்வதைக் காணலாம். பெண்கள் கல்வி, வேலை என அனைத்திலும் பங்கேற்றனர்.
இப்போது பெண்கள் சந்தைகள், தெருக்களில் வர முடியாமல் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் ஆண் உறவினர்கள் இல்லாமல் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதித்துள்ளனர். அதோடு, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களை உடனடியாக வெளியேற்றினர்.
முன்னதாக இங்குள்ள நகரங்களில் சந்தைகளி மக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கினர். சந்தோசமான சூழல் இருந்தது, விசேஷ காலங்களில் மக்கள் சந்தைகளில் குவிந்தனர்.
இப்போது இங்கு பீதி காணப்படுகிறது. தோட்டாக்களின் ஒலிகள் மட்டுமே கேட்கின்றன. அச்சம் காரணமாக மக்கள் தப்பி ஓடுகிறார்கள் சிலர் வீடுகளில் மறைந்திருக்கிறார்கள்.
முன்னர் விமான நிலையங்கள் விமான போக்குவரத்திற்கான இடமாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
இப்போது விமான நிலையம் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் கடைசி நம்பிக்கைக் கதிராக உள்ளது. அவர்கள் எப்படியாவது இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு தங்கியிருக்கிறார்கள். விமானங்களில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய கூட தயாராக இருக்கிறார்கள்.
மற்ற நாடுகளைப் போலவே, ஆப்கானிஸ்தானிலும் உள்ள கடைகள், பெண்கள் படம் உள்ள விளம்பரங்கள், கவர்ச்சிகரமான வண்ணமயமான சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்தன.
தாலிபான் ஆட்சி வந்தவுடன் பெண்களின் படங்களுடன் கூடிய விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன. பெண்ணின் படங்கள் இருந்தால் தாலிபான்களின் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்பதால். பயன்ந்து கொண்டு அனைத்தையும் நீக்கி வருகின்றனர்.