செப்டம்பர் மாதம் இந்த ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கணும்
மேஷம்: குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ரிஷபம்: செப்டம்பர் மாதம் அரசு அதிகாரிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சமூக கௌரவம் அதிகரிக்கும்.
கடகம்: இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீண் செலவுகள் கூடும். மாணவர்களுக்கு இந்த மாதம் பல நல்ல வாய்ப்புகள் வரும்.
சிம்மம்: சமூக மட்டத்திலோ அல்லது பணியிடத்திலோ உங்கள் வார்த்தைகளால் நீங்கள் ஒருவரை காயப்படுத்தலாம். மாத தொடக்கத்தில் சிம்ம ராசி மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறலாம். இத்துடன் கலைத்துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும்.
கன்னி: கோபம் அதிகரிக்கும் அதனால் கோபத்தைக் கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்யுங்கள். செப்டம்பர் மாதத்தில் பல சவாலான பணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
துலாம்: இந்த மாதம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்: திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கைக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தனுசு: இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் சிக்கலை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கும்பம்: இந்த மாதம் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மனதளவில் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
மீனம்: செப்டம்பர் மாதம் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுத்தி தரும். பெரியவர்களின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வீண் செலவுகள் கூடும்.