ஓடிடியில் வெளியாகியுள்ள 4 பிரம்மாண்ட திரைப்படங்கள்!

Thu, 24 Mar 2022-7:22 pm,

தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'வலிமை' படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம் ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் 25ம் தேதி வெளியாக உள்ளது.

 

ரன்வீர் சிங்க் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட '83' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  கபீர் கான் இயக்கத்தில் உருவான இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

 

பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியான 'பீம்லாநாயக்' திரைப்படம் ஆஹா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் இன்று வெளியாகியுள்ளது.  தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்கியுள்ளார்.

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்.  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link