தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?

Tue, 16 Jul 2024-4:37 pm,

பிரபல தாம்சன் நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய QLED டிவி தொடர்கள் மற்றும் செமி ஆட்டோமெடிக் மேஜிக் கிராண்டே தொடர் வாஷிங் மெஷின்களை அறிமுகப்படுத்தி அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தியுள்ளது.

 DVB-T2 டிஜிட்டல் டிவி வரவேற்பையும் 178 டிகிரி கோணத்தையும் கொண்டுள்ள தொலைகாட்சி பெட்டிகள் பார்ப்பதற்கு அற்புதமாய் இருக்கின்றன

செயற்கை நுண்ணறிவால் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய 75 இன்ச் மற்றும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த ஸ்மார்ட் டிவிகள் ஜூலை 19 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்

தாம்சனின் புதிய அக்வா மேஜிக் கிராண்டே தொடரில் 7 கிலோ, 8 கிலோ, 8.5 கிலோ, 10 கிலோ மற்றும் 12 கிலோ எடையுள்ள அரை தானியங்கி சலவை இயந்திரங்கள் உள்ளன. ரூ.8,999 முதல் தொடங்கு வாஷிங் மெஷின்களின் விலை, பிற நிறுவனங்களின் தரம் மற்றும் விலையுடன் ஒப்பிடும்போது குறைவானது, இவை ஜூலை 19 முதல் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.

தாம்சனின் 75 இன்ச் QLED ஸ்மார்ட் டிவி 4K டிஸ்ப்ளே மற்றும் பெசல்-லெஸ் டிசைனுடன் வருகிறது. இது Dolby Vision HDR 10+, Dolby Atmos, Dolby Digital Plus, DTS TrueSurround ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது 40 வாட் டால்பி ஆடியோ ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி ரோம் மற்றும் டூயல் பேண்ட் (2.4 + 5 ஜிகாஹெர்ட்ஸ்) வைஃபை மற்றும் கூகுள் டிவி போன்ற நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. Netflix, Prime Video, Hotstar, Zee5, Apple TV, Voot, Sony Liv மற்றும் Google Play Store போன்ற தளங்களில் இருந்து 500,000 க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளுடன் 10,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் மற்றும் கேம்கள் உள்ளன.

32-இன்ச் மாடலில் வேகமான 1366 x 768 பிக்சல் ரெசல்யூசன் மற்றும் 550 நிட்ஸ் பிரகாசம் உள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்டு டிவியில் இயங்கும் இந்த டிவி நெட்ஃபிக்ஸ், யூடியூப், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோவை எளிதாக இயக்குகிறது. மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், Wi-Fi மற்றும் Dolby Digital Plus சவுண்ட் டெக்னாலஜியுடன் 48 வாட்ஸ் வெளியீடு உள்ளது

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link