ஸ்மார்ட்போன் வாங்கும் செலவில் சர்வதேச சுற்றுலா செல்ல சில வழிகள்!

Sat, 30 Apr 2022-1:07 pm,

விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான தாய்லாந்தில் அழகான கடற்கரைகள், பெரிய மலைகள் மற்றும் வசதியான கோயில்கள் உள்ளன.  இந்த நாட்டிற்கான பயண செலவு இந்தியாவிலிருந்து ரூ.15000 முதல் ரூ.20000 வரை ஆகும்.  பெரும்பாலும் இந்திய மக்கள் தாய்லாந்திற்குப் சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள், ஏனெனில் இங்கு கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு மொத்தமாக ரூ.30,000 தான் செலவாகும்.

 

இந்தியாவில் இருந்து மிகக்குறைவான செலவில் செல்லும் ஒரு நாடு என்றால் அது இலங்கை.  இந்த இடம் சிறந்த பேக் பேக்கிங்/பட்ஜெட் நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.  புது டெல்லியில் இருந்து விமானத்தில் இந்நாட்டிற்கு சென்றுவர ஆகும் செலவு சுமார் ரூ.20,000 ஆகும்.  இங்கு தேயிலை தோட்டங்களின் நறுமணம் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் மக்களை கவர்ந்திழுக்கிறது.

சிங்கப்பூர் செல்வதற்கு அதிக செலவு ஆகலாம் என்று நினைக்கலாம் இருப்பினும், சில சிறிய தந்திரங்கள் மற்றும் திட்டமிடல் மூலம், பட்ஜெட் விலையில் இந்த நாட்டை நீங்கள் சுற்றி பார்க்கலாம்.  இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு செல்ல விமான செலவு ஒரு நபருக்கு ரூ.22000 முதல் ரூ.25000 வரை ஆகும்.  சகல தொழில்நுட்பங்களும் கொண்ட இந்த நாடு பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற பல இடங்களை கொண்டுள்ளது.  இங்குள்ள கட்டிடங்கள், பசுமையான இடங்கள், வண்ணமயமான பாதை, போன்ற பல தொழில்நுட்பங்கள் மக்களை கவர்கிறது.

 

இந்தியாவில் இருந்து மற்றொரு பிரபலமான குறைந்த செலவில் செல்லக்கூடிய நாடு சீஷெல்ஸ்.  இந்தியப் பெருங்கடலின் நீலமான நீர் மற்றும் அழகிய கடற்கரைகளால் இவ்விடம் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. ஆப்பிரிக்காவின் சொர்க்கமாக உள்ள இந்த இடம் அதன் அழகான சுற்றுப்புறத்திற்கு பெயர் பெற்றது, இந்தியாவிலிருந்து இந்த பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள ரூ.36000 செலவாகும்.

 

உலகின் இயற்கை எழில் கொஞ்சும் நாடுகளில் ஒன்றாக திகழும் பூடான் குறைந்த செலவில் சுற்றுலா செல்லும் இடமாகவும் உள்ளது.  இந்த நாடு முழுவதும் இயற்கை ததும்பியுள்ளது,  இந்தியாவிலிருந்து பூடானுக்கு நேரடியாக விமானம் இல்லை, பூடான் எல்லைக்கு மிக அருகில் உள்ள இந்திய விமான நிலையமான பாக்டோக்ராவிற்கு சென்று, அங்கிருந்து சுமார் 5 மணி நேரம் நீங்கள் பேருந்து பயணம் மேற்கொண்டால் தான் இந்த இடத்திற்கு செல்ல முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link