மனதளவில் பலமாக இருப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை பின்பற்றுங்கள்!
வாழ்க்கை அனைவருக்கும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை. கண்டிப்பாக அனைவருக்குமே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், அதை எதிர்கொள்ள, நாம் பலமான மன நிலையுடன் இருப்பது மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படி, தைரியமான மன நிலையுடன் இருக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
மனதளவில் வலிமையான நபர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் வலிமையால் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவர்கள், தங்களின் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வாழ்க்கைக்காக உபயோகப்படுத்தி கொண்டு, வெற்றியடைகின்றனர். தங்களது இலக்கை நோக்கிய பயணத்தில் இவர்கள் தடையாக எதையுமே நினைப்பதில்லை.
ஒரு நபரை மனரீதியாக வலுவான நபராக வேறுபடுத்திக் காட்டுவது, அவர்களின் மாற்றத்தைத் தழுவும் திறன்தான். மனரீதியாக வலுவான நபர்கள் வாழ்க்கையின் நிலையான மாற்றங்களின் தவிர்க்க முடியாத தன்மையை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். மாற்றத்தை எதிர்ப்பதை விட, அவர்கள் அதை வரவேற்கிறார்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக பார்க்கிறார்கள்.
ஒரு நம்பிக்கையான மனநிலையை வளர்ப்பது மனரீதியாக வலுவான நபர்களின் தனிச்சிறப்பாகும். அவர்கள், வாழ்க்கையின் உண்மைகளை நேரடியாக எதிர்கொள்கிறார்கள், எதிர்மறைகளை பற்றி யோசிப்பதை தவிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் குறைபாடுகளையும் வாழ்க்கையின் சில எதிர்மறை அம்சங்களையும் ஒப்புக்கொண்டாலும், இந்த காரணிகள் அவர்களை தோற்கடிக்க அனுமதிக்க மாட்டார்கள். மனநிறைவு மன வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மனதளவில் வலிமையான நபர்கள், வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கின்றனர். அவர்கள் தங்களது பாதையில் ஏற்படும் அபாயங்களை மதிப்பிட்டு, நல்ல முடிவுகளை எடுக்கிறார்கள். சவால்களில் இருந்து தள்ளி நிற்காமல் கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த அணுகுமுறை, தெரியாதவற்றிற்குள் தங்களை புகுத்திக்கொள்ளவும், வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளில் செல்லவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தாங்கள் சாதிக்க விரும்பும் துறை குறித்து, படிப்பதோடு மட்டுமன்றி அதில் ஏற்கனவே சாதனை அடைந்துள்ளவர்களிடம் நிறையவே கற்றுக்கொள்கிறார்கள். யாரிடம் இருந்தும் எதையும் கற்றுக்கொள்ள இவர்கள் தயங்குவதே இல்லை. சாதித்ததவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதை இவர்கள் முன்னேற்றத்திற்கான பாதையாக பார்க்கிறார்கள்.
மனரீதியாக வலிமையான நபர்கள், பிறரை அதிகம் நம்புவதை விட தன்னை அதிகமாக நம்புவர். அவர்கள், தங்களது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என தீவிரமாக திட்டமிடுகிறார்கள், நேரத்தையும் திறமையையும் தங்களுக்காக அர்ப்பணித்து, தங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்ற முயற்சி செய்கிறார்கள். புதிய திறன்களைப் பெறுதல், சவால்களைத் எதிர் கொள்ளுதல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராகுதல் ஆகியவை தனிப்பட்ட வளர்ச்சிக்கான அவர்களின் உறுதிப்பாட்டின் சிறந்த அம்சங்களாகும்.