கார் மைலேஜ் சரியா கொடுக்கலையா... இந்த எளிய விஷயங்களை கடைபிடிச்சாலே போதும்
சரியான டயர் அழுத்தத்தை பராமரிக்கவும்: குறைந்த காற்றோட்ட டயர்கள் எரிபொருள் செயல்திறனைக் குறைக்கும். உங்கள் டயர் அழுத்தத்தை தவறாமல் சரிபார்த்து, பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
சீராக ஓட்டவும்: நிலையான வேகத்தைப் பராமரிக்கவும், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த உதவும் . திடீரென வேகத்தை அதிகரித்தல் மற்றும் அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்கவும். ஸ்மூத் டிரைவிங் எரிபொருள் செயல்திறனை 30% வரை மேம்படுத்தலாம்.
தேவையற்ற பொருட்களை அகற்றவும்: உங்கள் காரில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்றவும். டிக்கியில் இருக்கும் கூடுதல் எடை, குறிப்பாக சிறிய கார்களில், மைலேஜைக் கணிசமாகக் பாதிக்கலாம்.
ஏர் கண்டிஷனிங் பயன்பாடு: ஏசியைப் சிக்கனமாக பயன்படுத்துவது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கலாம். குளிர்ச்சி அளவை குறைவாக பயன்படுத்துவது எரிபொருள் செலவைக் குறைக்கும்
வழக்கமான பராமரிப்பு: கார்களை டீலரின் அறிவுரைப்படி, காரை அவ்வப்போது சர்வீஸ் செய்து சிறப்பாக பரமாரிக்கவும். மொட்டர் ஆயிலை வழக்கமாக மாற்றுதல், காற்று வடிகட்டி மாற்றுதல் மற்றும் என்ஜின் சோதனைகள் ஆகியவற்றுடன் உங்கள் காரை நன்கு பராமரிக்கவும்.
உங்கள் பயணங்களைத் திட்டமிடுங்கள்: இரண்டு மூன்று வேலைகளை இணைத்து, உங்கள் பயணத்தை திட்டமிடுவது எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிப்பதற்கான சிறந்த வழி
போக்குவரத்தில் இன்ஜினை ஆஃப் செய்தல்: போக்குவரத்து நெரிசலில் ஒரு நிமிடத்திற்கு மேல் வாகந்த்தை நிறுத்தும் நிலை வந்தால், உங்கள் இன்ஜினை ஆஃப் செய்யவும்.
கார் ஜன்னல்களை மூடி வைக்கவும்: அதிக வேகத்தில் செல்லும் போது, கார் ஜன்னல்கள் திறந்திருந்தால், இழுவை சக்தியை உருவாக்கி எரிபொருள் செயல்திறனை பாதிக்கும்.
மோட்டார் ஆயில்: உங்கள் காருக்கு பரிந்துரைக்கப்பட்ட தரமான மோட்டார் ஆயிலைப் பயன்படுத்து வேண்டும். தவறான எண்ணெயைப் பயன்படுத்துவது எரிபொருள் செயல்திறனை பெரிதும் பாதிக்கும்.