Tirupati கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் தங்க காணிக்கை: செய்தது யார்?
இதுகுறித்து பேசிய கோயில் அதிகாரி ஒருவர், திருமலையில் வசிக்கும் ஒரு குடும்பம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கூடுதல் செயல் அதிகாரியியான ஏ.வெங்கட் சதர்மா ரெட்டியிடம் இதை வழங்கியது என தெரிவித்துள்ளது. தனது பெயரை வெளிப்படுத்தாமல் அவர் இந்த நன்கொடையை அளித்துள்ளார்.
இந்த தங்கக் கையுறைகளின் எடை சுமார் 5.3 கிலோ மற்றும் அதன் விலை ரூ.3 கோடி இருக்கும். இந்த கையுறைகள் மலைக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாளை அலங்கரிக்கும்.
இந்த தங்கக் கையுறைகளின் எடை சுமார் 5.3 கிலோ மற்றும் அதன் விலை ரூ.3 கோடி இருக்கும். இந்த கையுறைகள் மலைக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாளை அலங்கரிக்கும். கடந்த ஆண்டு ஏற்பட்ட தொற்று காரணமாக, கோயிலுக்கு வந்து கடவுளை தரிசிக்க தடை செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தமிழகத்தில் வசிக்கும் மற்றொரு பக்தர் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோவிலில் தங்க காணிக்கை அப்போது அளிக்கப்படுகின்றது. அதிக நன்கொடை பெறும் கோயில்கலீல் இது முதல் இடத்தில் உள்ளது. திருமலை மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் வெங்கடேசப் பெருமானின் அருளைப் பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இங்கு வரும் ஒவ்வொரு பக்தரின் ஆசையும், வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான். அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும் இந்தியாவில் உள்ள கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த யாத்ரீகர்களின் வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கவனித்துக் கொள்கிறது.