திருப்பதி தரிசனம் செய்ய IRCTC அளிக்கும் அற்புத வாய்ப்பு: புக்கிங் செய்யும் முறை இதோ
IRCTC -யின் Blissful Tirupati Package-ல், 1 இரவு மற்றும் 2 நாட்களுக்கு ரூ .14,300 செலுத்த வேண்டும். அக்டோபர் 23 அன்று இந்தப் பயணத்திற்கு நீங்கள் முன்பதிவு செய்யலாம். இது தவிர, உங்கள் பயணத்தை 30 அக்டோபர், 13, 18 மற்றும் 27 நவம்பர் ஆகிய தேதிகளிலும் நீங்கள் திட்டமிடலாம். பயணிகள் சென்னை விமான நிலையம் வரை தாங்களாக வர வேண்டும். இதற்கு IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான irctctourism.com-க்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
திருப்பதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். திருமலை என்றும் அழைக்கப்படும் திருப்பதி, ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலுக்கு புகழ் பெற்றது. இது விஷ்ணுவின் கோவிலாகும். வட இந்தியர்கள் இங்கு கோவில் கொண்டுள்ள விஷ்ணு பகவானை பாலாஜி என்றும் தென்னிந்தியர்கள் வெங்கடாசலபதி, வேங்கடேஸ்வரர், கோவிந்தா என்றும் அழைக்கிறார்கள். திருப்பதி கோயில் திருமலை மலைகளில் அமைந்துள்ளது.
இந்த Blissful Tirupati பயணத்தின் போது திருப்பதியில் ஒரு இரவு தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பயணிகள் இரவு உணவையும் காலை உணவையும் இந்த தொகுப்பில் பெறுகிறார்கள். இதனுடன், தரிசன பாஸ் மற்றும் லோக்கல் டூர் கைட் ஆகியவை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் பயணிகளுக்கு தங்களுக்கு விருப்பமான உணவு கிடைக்காது. உணவின் மெனு முன்கூட்டியே முடிவு செய்யப்படும். இது தவிர, ரூம் சர்வீஸ், மினி பார், சலவை போன்ற சேவைகளுக்கும் தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
IRCTC-யின் Blissful Tirupati Package-ன் புக்கிங்கை உங்கள் பயணத்திற்கு 21 நாட்களுக்கு முன் ரத்து செய்தால், நீங்கள் முன்பதிவின் 30 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் 21 முதல் 15 நாட்களுக்குள் முன்பதிவை ரத்து செய்தால், 55 சதவீதம் மற்றும் 14 முதல் 8 நாட்களுக்குள் முன்பதிவை ரத்து செய்தால், 80 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பயணத்தின் 7 நாட்களுக்குள் நீங்கள் முன்பதிவை ரத்து செய்தால், உங்களுக்கு எந்த தொகையும் திரும்பிக் கிடைக்காது.